Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னணி தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை .. சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டுபிடிப்பு

முன்னணி தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை .. சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டுபிடிப்பு

By: vaithegi Wed, 03 Aug 2022 10:09:48 AM

முன்னணி தொழில் நிறுவனங்களில்  வருமான வரித்துறை .. சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டுபிடிப்பு

புதுடெல்லி : குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சந்தேகித்தது.

இதனையடுத்து சமீபத்தில் இந்த தொழில் குழுமத்துக்கு சொந்தமாக கெடா, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள 38 இடங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தினர். இச்சோதனைகளில் கணக்கில் வராத கருப்பு பணம் ரூ.1,000 கோடி கண்டறியப்பட்டுள்ளது.

black money,income tax deptt ,கருப்பு பணம்,  வருமான வரித்துறை

மேலும் இந்த தகவல், சி.பி.டி.டீ. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.24 கோடி, ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள், தங்க கட்டிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து இந்த சோதனைகளின்போது, கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் தரவுகள், அங்கு பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கு ஆதாரங்களாக சிக்கி உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. வருமான வரிசோதனையின்போது சிக்கிய தரவுகள், தொழில் குழும நிறுவனங்களின் நிறுவனர்களின் சொந்த பயன்பாட்டுக்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Tags :