Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.300ஆக உயர்வு

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.300ஆக உயர்வு

By: vaithegi Wed, 04 Oct 2023 4:48:27 PM

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.300ஆக உயர்வு

இந்தியா: கேஸ் சிலிண்ட்ருக்கான மானியம் ரூ.300 ஆக அதிகரிப்பு ..இந்தியா முழுவதும் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 1118.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ. 200 குறைத்து உள்ளது.

மேலும் இது மட்டுமல்லாமல், 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ. 158 குறைக்கப்பட்டு உள்ளது. இது போக, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

gas cylinder,subsidy ,கேஸ் சிலிண்டர்,மானியம்


இந்த நிலையில், ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக மத்திய அமைச்சரவை இன்று உஜ்வாலா பயனாளிகளுக்கான எல்பிஜி மானியத்தை ரூ.200 லிருந்து ரூ.300ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்கள் மத்திய அரசின் ரூ.200 தள்ளுபடி மற்றும் ரூ. 300 மானியத்தின் படி கேஸ் சிலிண்டரினை பெறலாம் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவையில் தெரிவித்து உள்ளார்.

Tags :