Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கீழடி அகழாய்வில் அழகிய வடிவமைப்புடன் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீர் கூஜா

கீழடி அகழாய்வில் அழகிய வடிவமைப்புடன் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீர் கூஜா

By: Nagaraj Wed, 24 June 2020 9:21:36 PM

கீழடி அகழாய்வில் அழகிய வடிவமைப்புடன் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீர் கூஜா

அழகிய வடிவமைப்புடன் கிடைத்த தண்ணீர் கூஜா... சிவகங்கை மாவட்டம் கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் அழகிய வடிவமைப்புடன் கூடிய தண்ணீர் கூஜா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

6ம் கட்ட அகழாய்வு நடைபெறும் கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புதிய பொருட்கள் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. 6ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

கொந்தகை அகழாய்வில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகள், பானைகள் மரபணு ஆய்விற்காக மதுரை காமராஜ் பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

archeology,prohibition,excavation,underground,public ,தொல்லியல்துறை, தடை, அகழாய்வு, கீழடி, பொதுமக்கள்

இந்த நிலையில், அழகிய வடிவமைப்புடன் கூடிய கூஜா ஒன்றும் கொந்தகையில் கிடைத்துள்ளது. 2 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட கூஜா, வாய்ப்பகுதி குறுகியும், உட்புறம் விரிவடைந்தும் காணப்படுகிறது. கூஜாவின் மேற்புறத்தில் மூலிகை வண்ணங்களை கொண்டு கோடுகள் வரையப்பட்டுள்ளன.

அதே போல அகரத்தில் நடைபெறும் அகழாய்வில் தங்க நாணயம், நத்தை ஓடுகள், பானைகள் கிடைத்துள்ளன. பெரும்பாலான பானைகள் அடிப்புறத்தில் புகை படிந்திருப்பதால், அவைகள் உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக கீழடி 6ம் கட்ட அகழாய்வை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகழாய்வு நடைபெறும் இடங்களில் இன்று முதல் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Tags :