Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு

கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு

By: Karunakaran Tue, 08 Sept 2020 09:07:39 AM

கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு

உலக அளவில் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், ஒவ்வொரு ஆண்டும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் போலியோ சொட்டு மருந்து போன்ற தடுப்பு மருந்துகளை வாங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள 25-க்கு மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போரே, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சப்ளை செய்யும் மிகப்பெரிய பணியை யுனிசெப் முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

unicef,corona vaccine,supply,countries ,யுனிசெஃப், கொரோனா தடுப்பூசி, வழங்கல், நாடுகள்

உலக சுகாதார அமைப்பு, பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு, கவி நிறுவனம், உலக வங்கி, பில்கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளை பங்குதாரர்களாக கொண்டு அவற்றின் உதவியுடன் தடுப்பூசிகளை வாங்கி வினியோகிக்க யுனிசெப் தீர்மானித்துள்ளது. மேலும் 28 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை யுனிசெப்புடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாக ஹென்ரீட்டா போரே கூறியுள்ளார்.

மேலும் அவர், 2023-ம் ஆண்டு வரை அந்த நிறுவனங்கள் முழுவீச்சில் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபடும். முதலீட்டு ஆதரவை அவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கான நிதி முதலீடு தொடர்பாக வருகிற 18-ந் தேதிக்குள் உடன்பாடு கையெழுத்தாக இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

Tags :
|
|