Advertisement

யுனிசெப்பின் அதிர்ச்சியடைய வைக்கும் எச்சரிக்கை

By: Nagaraj Fri, 15 May 2020 11:57:47 AM

யுனிசெப்பின் அதிர்ச்சியடைய வைக்கும் எச்சரிக்கை

சுகாதார நெருக்கடி விரைவில் குழந்தை உரிமை நெருக்கடியாக மாறுகிறது. பல்வேறு தடுப்பு காரணங்களால், உலகம் முழுவதும் தினமும் 6 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார நெருக்கடி விரைவில் குழந்தை உரிமை நெருக்கடியாக மாறுகிறது. அதைப்போல, கொரோனாவின் தாக்கம் காரணமாக, 12 லட்சம் குழந்தைகள் அடுத்த 6 மாதங்களில் உயிரிழக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளது.

unicef,warning,exploration,risk,children ,யுனிசெப், எச்சரிக்கை, ஆய்வு, அபாயம், குழந்தைகள்

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார பள்ளி அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், பல நாடுகளில் பள்ளிகள் மூலமாகத் தான் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், தற்போது அவை மூடப்பட்டுள்ளதால் முறையாக உணவின்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 6 மாதங்களில், 5 வயதிற்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக் காட்டியுள்ளது.

Tags :
|
|