Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

காரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By: vaithegi Thu, 08 June 2023 2:14:54 PM

காரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா: நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு ... இந்தியாவில் பொருளாதார விவரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பலன் தரும் விதத்தில் காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5.3 சதவீதம் முதல் 10.35 சதவீதம் வரை உயர்த்த அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

இதையடுத்து இந்த அறிவிப்பு காரணமாக கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.128 முதல் ரூ.805 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.

central cabinet,garib crop ,மத்திய அமைச்சரவை, காரீப் பயிர்

அதில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பயிர் ஆண்டில் பயிரிடப்படும் மற்றும் ரீப் சந்தைப்படுத்துதல் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கொள்முதல் செய்யப்படும் அனைத்து முக்கிய காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் விவசாயிகள் பலர் பலனடைந்து இருக்கின்றனர். மேலும் இந்த அறிவிப்பு மூலமாக நெல் குவிண்டால் விலை ரூ. 2,040ல் இருந்து ரூ. 2,183ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :