Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By: vaithegi Fri, 07 Apr 2023 12:03:47 PM

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா: நாட்டில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இதையடுத்து இதில் பெட்ரோல்,டீசல் விலை ஒவ்வொரு நாளும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் நேற்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, சிஎன்ஜி, குழாய் சமையல் விலையை கட்டுப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

central cabinet,cylinder price ,மத்திய அமைச்சரவை,சிலிண்டர் விலை

மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இயற்கை எரிவாயு மற்றும் அமெரிக்கா ,கனடா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் எரிவாயு சிலிண்டர் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags :