Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்க்கரை ஏற்றுமதிக்கு மானிய வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சர்க்கரை ஏற்றுமதிக்கு மானிய வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By: Nagaraj Wed, 16 Dec 2020 9:25:03 PM

சர்க்கரை ஏற்றுமதிக்கு மானிய வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை ஒப்புதல்... சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை அகற்ற உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 5 கோடி விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

procurement,auction in march,cabinet approval,union minister ,கொள்முதல், மார்ச் மாதம் ஏலம், அமைச்சரவை ஒப்புதல், மத்திய அமைச்சர்

மானியங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று 3 லட்சத்து 92 ஆயிரத்து 332 கோடி ரூபாய் மதிப்பிலான தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் அடுத்த சுற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏலம் நடைபெறும் என்றும் கூறினார். மேலும், நம்பிக்கையான நிறுவனங்களிடம் இருந்து கருவிகளை தொலைத்தொடர்புத்துறை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags :