Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

By: vaithegi Wed, 02 Aug 2023 10:32:46 AM

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இந்தியா: இன்று காணொலி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ....மத்திய நிதியமைச்சகத்திற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான பரிந்துரை மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய ஆலோசனை மேற்கொள்ளும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது.

51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதையடுத்து இதில் ஒவ்வொரு மாநில அரசின் சார்பில் நிதி அமைச்சக முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

gst council meeting,union finance minister nirmala sitharaman ,ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது ஆன்லைன் சூதாட்டம் , கேம்பளிங், குதிரை பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் 28 சதவீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில்,

இதில் உள்ள சிக்கல்கள், எவ்வாறு நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :