Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

By: vaithegi Sat, 18 Feb 2023 08:45:40 AM

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது ... ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்தாண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன.

ஆனால் போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. நடைபெற உள்ள 49-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

gst,delhi ,ஜிஎஸ்டி ,டெல்லி

மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்த பதிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் என்பதால் வர்த்தகத் துறையின் கவனம் இதில் திரும்பியுள்ளது.

Tags :
|