Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு

By: vaithegi Mon, 17 July 2023 12:00:12 PM

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு

இந்தியா: 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டம் ..... மக்களவையில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெற்ற மசோதாக்கள், டெல்லி அவசர சட்ட மசோதா உட்பட 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அதன்படி உயிரியல் மாறுபாடு திருத்த மசோதா, திஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா உட்பட பல மசோதாக்கள் நாடாளுமன்ற குழுக்களின் ஆய்வுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.

central government,parliament monsoon session series , மத்திய அரசு,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

இதனை அடுத்து தபால் சேவைகள் மசோதா, பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா, சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா, தற்காலிக வரி வசூல் மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா, தேசிய பல் ஆணைய மசோதா, தேசிய செவிலியர் ஆணைய மசோதா, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா,

மேலும் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, திரைப்படம் சட்ட திருத்த மசோதா, பத்திரிகை பதிவு மசோதா போன்றவை உட்பட 21 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மொத்தம் 17 நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags :