Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறுதானிய கொள்முதல் இலக்கை இரட்டிப்பாக்கி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

சிறுதானிய கொள்முதல் இலக்கை இரட்டிப்பாக்கி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

By: vaithegi Thu, 01 Sept 2022 11:13:36 AM

சிறுதானிய கொள்முதல் இலக்கை இரட்டிப்பாக்கி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

இந்தியா : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தொடர் மழையின் காரணமாக பயிர்களில் மழைநீர் தேங்குவதால் பயிர்கள் அனைத்தும் அழுகி வீணாகின்றன. எனவே இதன் காரணமாக அதிக நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் தமிழக அரசு இதற்கான உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் கொள்முதலை இரட்டிப்பாக்கவும் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் வேளாண்பருவங்களான கரீப் பருவம் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலும், ரபி பருவம் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும் உள்ளது.

இந்த 2 பருவங்களையே விவசாயிகள் அதிகம் பயிர்களை பயிரிட்டு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாற்றம், நெல் கொள்முதல் இலக்கு பற்றி ஒன்றிய அரசின் உணவுத்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

small grains,united govt ,சிறுதானியம்,ஒன்றிய அரசு

மேலும் அந்த கூட்டத்தின் முடிவில் 2022-2023ம் ஆண்டுக்கான கரீப் பருவத்தில் மாநிலங்களிடம் இருந்து மத்திய தொகுப்பிற்காக 518 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு கொள்முதல் 13.7 லட்சம் டன்னாக கொள்முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண் துறையில் இயந்திரமயமான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது, குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, கொள்முதல் நடவடிக்கைகளின் செலவைக் குறைப்பது, விவசாயத்தில்புதுமையான நுட்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகளை கையாளுதல் பற்றி மாநில அரசுகளுடன் உணவு அமைச்சகம் ஆலோசனை ஒன்று நடத்தப்பட்டது.

Tags :