Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுகவுடனான கூட்டணி தொடரும் .. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அதிமுகவுடனான கூட்டணி தொடரும் .. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

By: vaithegi Thu, 30 Mar 2023 10:41:04 AM

அதிமுகவுடனான கூட்டணி தொடரும் .. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு வருகிறது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே அங்கம் வகித்தது பாஜக. இதேபோன்று நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்தது என்பது குறிப்பிட தக்கது.

கடந்த நில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் கூறினார். அண்ணாமலையின் இப்பேச்சு கூட்டணியை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதனால் தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி ஒன்று இருந்து வருகிறது.

union home minister amit shah,aiadmk ,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,அதிமுக


இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து அந்த கேள்விக்கு உள்துறை மந்திரி அமித்ஷா , "தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும்" என அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையெல்லாம் ஒருபோதும் பாஜக பெரிதுபடுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல என அவர் கூறினார்.

Tags :