Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

By: Monisha Tue, 18 Aug 2020 12:07:30 PM

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை. இதனிடையே கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
|