Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் குணம்பெற வேண்டும் - உத்தவ் தாக்கரே வாழ்த்து

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் குணம்பெற வேண்டும் - உத்தவ் தாக்கரே வாழ்த்து

By: Karunakaran Tue, 04 Aug 2020 2:34:11 PM

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் குணம்பெற வேண்டும் - உத்தவ் தாக்கரே வாழ்த்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பிரபலங்கள், அரசியல் வாதிகள் என அனைவரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

union home minister,amit shah,uddhav thackeray,corona virus ,மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, உத்தவ் தாக்கரே, கொரோனா வைரஸ்

தற்போது மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில், அமித்பாய், நீங்கள் மிக விரைவில் குணம்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். எப்போதும் போல நீங்கள் முழு ஆற்றலுடன் பணியாற்றி கொரோனா பிரச்சினையில் எங்களை வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :