Advertisement

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை

By: vaithegi Sat, 11 Feb 2023 06:33:51 AM

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகை

மங்களூரு: கேரளாவிலிருந்து இன்று கர்நாடகம் வருகிறார் ..... மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கர்நாடகம் வருகிறார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மங்களூருவில் மட்டும் அவர் பங்கேற்க இருந்த பா.ஜனதா யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.கேரளாவிலிருந்து இன்று காலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகம் வருகிறார்.

இதையடுத்து அவர் தட்சிண கன்னடாவுக்கு வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் அவர் புத்தூரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார். ஆனால் தட்சிண கன்னடாவில் அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டதாலும், கொலை சம்பவங்கள் அதிகரித்ததாலும் அங்கு அமித்ஷாவின் வருகையையொட்டி 3,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

karnataka,amitsha ,கர்நாடகம் ,அமித்ஷா

புத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அமித்ஷா மங்களூருவுக்கு செல்கிறார். இந்நிலையில் புத்தூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமித்ஷா மங்களூருவுக்கு வர தாமதமாகும் என சொல்லப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மங்களூருவில் அமித்ஷா பங்கேற்க இருந்த பா.ஜனதாவின் யாத்திரையை திடீரென ரத்து செய்திருப்பதாக பா.ஜனதா மாவட்ட தலைவர் சுதர்சன் தகவல் தெரிவித்துள்ளார்.அமித்ஷா கெஞ்சாரு பகுதியில் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார். அக்கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கெஞ்சாரு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறும் கூட்டத்தில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜனதாவினர், கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதுதவிர கூட்டுறவு வங்கியின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார். பின்னர் ஹனுமகிரியில் கட்டப்பட்டுள்ள பாரத மாதா கோவிலையும் அவர் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கு பிறகு பாரத மாதாவுக்கு கோவில் கட்டியிருப்பது ஹனுமகிரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :