Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை

By: Monisha Fri, 20 Nov 2020 08:22:36 AM

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். அவரது வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், கலைவாணர் அரங்கம் உள்பட முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர் மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில், மத்திய மந்திரி அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். பின்னர், அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 2 மணிக்கு வருகிறார். வழிநெடுக அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

home minister,amit shah,tamil nadu,police security,chennai ,உள்துறை மந்திரி,அமித்ஷா,தமிழ்நாடு,போலீஸ் பாதுகாப்பு,சென்னை

நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

மேலும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில், மத்திய மந்திரி அமித்ஷா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி விழா பேருரை ஆற்றுகிறார்.

home minister,amit shah,tamil nadu,police security,chennai ,உள்துறை மந்திரி,அமித்ஷா,தமிழ்நாடு,போலீஸ் பாதுகாப்பு,சென்னை

விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார். அங்கு இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அமித்ஷா சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்டக் குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

அன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், மறுநாள் (22-ந்தேதி) காலை 10 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Tags :