Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாம்-மிசோரம் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை

அசாம்-மிசோரம் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை

By: Karunakaran Tue, 20 Oct 2020 2:22:56 PM

அசாம்-மிசோரம் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை

அசாம் மற்றும் மிசோரம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 155 கி.மீ. எல்லையை பகிர்ந்து வருவதன் காரணமாக, சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இதில் எந்த வித பலனும் இதுவரை இல்லை. எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், மிசோரத்தை ஒட்டியுள்ள அசாம் மாவட்டமான சச்சாரின் லைலாபூரில் மிசோரம் அரசு அதிகாரிகள் கடந்த 16-ந் தேதி ஒரு கொரோனா பரிசோதனை மையத்தை அமைத்தனர்.

மிசோரம் எல்லையில் இருந்து 1½ கி.மீ.க்கு வெளியே, அதாவது அசாம் பகுதிக்குள் இந்த பரிசோதனை மையம் அமைக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அசாம் அரசின் அனுமதியின்றி ஒருதலைப்பட்சமாக இந்த மையத்தை அமைப்பதற்கு அசாம் அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. மிசோரம் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு லைலாபூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் வெடித்தது.

union home secretary,ajay balla,assam,mizoram ,மத்திய உள்துறை செயலாளர், அஜய் பல்லா, அசாம், மிசோரம்

இந்த மோதல் வன்முறையாக மாறி, மிசோரமை சேர்ந்த சிலர் அசாம் பகுதிக்குள் இருந்த வீடுகள், கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் ஒருவரையொருவர் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டதில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இரு மாநில எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்காவிடமும் பேசி வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில் எல்லை மோதல் தொடர்பாக அசாம் மற்றும் மிசோரம் மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தற்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பதற்ற தணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் எடுத்து கூறினர். அப்போது இரு மாநில எல்லையில் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அஜய் பல்லா அறிவுறுத்தினார்.

Tags :
|