Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய மந்திரி அமித்ஷா நாளை ரஜினிகாந்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்

மத்திய மந்திரி அமித்ஷா நாளை ரஜினிகாந்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்

By: Monisha Fri, 20 Nov 2020 5:25:07 PM

மத்திய மந்திரி அமித்ஷா நாளை ரஜினிகாந்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்

பா.ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அமித்ஷா நாளை சென்னை வருகிறார். தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் அமித்ஷா, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் கணிசமான சீட்டுகளை இரட்டை இலக்க எண்ணிக்கையில் பெற்றுவிட வேண்டும் என்பதில் அக்கட்சி தலைவர்கள் உறுதியாக உள்ளனர். அதே நேரத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று அதில் களமிறங்கி, வெற்றிக்கனியை பறிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான வியூகத்தையே நாளை அமித்ஷா தொடங்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜனதா சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்களுடன் நாளை அமித்ஷா முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்.

union minister,amit shah,rajinikanth,election,bjp ,மத்திய மந்திரி,அமித்ஷா,ரஜினிகாந்த்,தேர்தல்,பாரதிய ஜனதா கட்சி

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதற்காக பாராளுமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணியை அப்படியே தொடரவும் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட பெரிய கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அக்கட்சி உறுதியாக உள்ளது.

மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தை எப்படியும் களம் இறக்கி விட வேண்டும் என்பதில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ரஜினியே மிகப்பெரிய ஆயுதமாக இருப்பார் என்று பா.ஜனதா நம்புகிறது. இதற்காக நாளை சென்னை வரும் அமித்ஷா, ரஜினிகாந்தை சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தத்தில் அமித்ஷா வருகை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :