Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

By: Nagaraj Sun, 05 July 2020 10:47:15 AM

தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

மத்திய அமைச்சர் பாராட்டு... நாட்டிலேயே, முதன் முறையாக, ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை மருத்துவ சேவை வழங்கி வருவதற்கு, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஜோயா கான் உடன் எடுத்த படங்களை, 'டுவிட்டரில்' பதிவேற்றி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், ஜோயா கான் என்ற திருநங்கை, பொது சேவை மையம் மூலம், தொலை துார மருத்துவ சேவையை துவக்கியுள்ளார். இந்தியாவில், முதன் முறையாக, திருநங்கை ஒருவர் இத்தகைய சேவையில் ஈடுபட்டு உள்ளார்.

transgender,joaquin,public service,distant,appreciation ,திருநங்கை, ஜோயாகான், பொதுசேவை, தொலைதூரம், பாராட்டு

அவர், திருநங்கையர் சமூகத்திற்கு, 'டிஜிட்டல்' கல்வியறிவை வழங்கவும், சிறப்பான வாய்ப்புகளை அளிக்கவும், இத்தகைய சேவையில் இறங்கியுள்ளதை பாராட்டுகிறேன்.

கொரோனாவால் வர்த்தக நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. வேலைவாய்ப்பு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஜோயா கான் தொழில் முனைவோருக்கு உந்துதலை அளிக்கும் வழிகாட்டியாக உருவெடுத்து உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜோயாகான் நடத்தும் பொது சேவை மையத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தொலை துாரத்தில் உள்ள மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்.

Tags :