ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மத்திய அமைச்சர் தகவல்
By: Nagaraj Thu, 05 Nov 2020 09:58:04 AM
மத்திய அமைச்சர் தகவல்... மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 31ம்தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜூலை 5ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இடையூறுகளால் ஆசிரியர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது தொற்றின் வேகம் குறைய தொடங்கியிருக்கும் நிலையில், இந்த
தேர்வுக்கான புதிய தேதியை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
நாடு முழுவதும்
112 நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு, பின்னர் நிர்வாக
காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, 2021ம் ஆண்டு
ஜனவரி 31ம் தேதி நடைபெறும் என்றும், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு
நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு வசதியாக, இந்த தேர்வு 135 நகரங்களில்
நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.