Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதிமன்றங்களிலும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் .. மத்திய அமைச்சர் தெரிவிப்பு

நீதிமன்றங்களிலும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் .. மத்திய அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Thu, 19 Jan 2023 9:54:03 PM

நீதிமன்றங்களிலும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் ..  மத்திய அமைச்சர் தெரிவிப்பு

இந்தியா: இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த 5ஜி இணைய சேவையை ஏலம் எடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த 5ஜி இணைய சேவை பல மடங்கு வேகத்தில் இருக்கும் என தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தடையில்லா இணையத்தை ஒவ்வொரு நொடியும் பெறலாம். இது நெட்வொர்க் செயல் திறனை மேன் மேலும் உயர செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

union minister,5g service ,  மத்திய அமைச்சர், 5ஜி சேவை

இதனையடுத்து இந்த 5 ஜி சேவை முதல் கட்டமாக பெங்களூர், சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மட்டும் பயன்பாட்டில் இருந்து கொண்டு வருகிறது.நடப்பாண்டில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என முன்னணி நெட் ஒர்க் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

மற்ற இடங்களை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் 5ஜி இணைய சேவை பெறும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :