Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒப்பந்தங்களை சீனா மீறியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

ஒப்பந்தங்களை சீனா மீறியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

By: Nagaraj Thu, 10 Dec 2020 09:19:32 AM

ஒப்பந்தங்களை சீனா மீறியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகள் தரப்பிலும் தலா சுமாா் 50,000 வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனா்.

லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவு தொடங்கிவிட்ட போதிலும், அங்கு இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைக்கவில்லை. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியில் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில், ஆஸ்திரேலிய கொள்கை வகுப்பு அமைப்பு சாா்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு நடப்பாண்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விரிசல் தோன்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே சீனாவுடனான நல்லுறவு மேம்படும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

china,violated,india,rift in good relations ,சீனா, மீறப்பட்டு, இந்தியா, நல்லுறவில் விரிசல்

எல்லையில் பதற்றமான சூழல் நிலவும்போது, மற்ற துறைகளில் இயல்பான நல்லுறவைத் தொடா்வது சாத்தியமில்லாதது. வா்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடா்பாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாகவும் இரு நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான படைகளைக் குவிப்பதற்கு எதிரான ஒப்பந்தங்களிலும் இந்தியாவும் சீனாவும் கையெழுத்திட்டன. ஆனால், அந்த ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்களை லடாக் எல்லைப் பகுதியில் சீனா குவித்துள்ளது. எல்லையில் படைகளைக் குவித்துள்ளதற்கு இதுவரை 5 வெவ்வேறு விளக்கங்களை சீனா அளித்துள்ளது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவை மீட்டெடுப்பது மிகப் பெரிய விஷயமாக இருக்கும். இரு நாடுகளின் பிரதிநிதிகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் தொடா்ந்து மீறப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
|
|