Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..

அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..

By: Monisha Tue, 19 July 2022 8:07:42 PM

அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..

டெல்லி: அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தி 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள் நேற்று அமலுக்கு வந்தது.

எடையளவுச் சட்டத்தின் , படி பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக விதித்து ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென கடந்த ஜூன் மாதமே ஜி.எஸ்.டி கவுன்சில் செய்தி வெளியிட்டது.விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதமாக ஜி.எஸ்.டி விதித்து ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன.

gst,rice,wheat,curd , ஜிஎஸ்டி , பொருட்கள்,அரிசி, பால்,

இதனால் அரிசி, கோதுமை, தயிர், லஸ்ஸி போன்ற பொருட்களின் விலை உயர்ந்தது. அரிசிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள்,கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அரிசி, கோதுமை, தயிர் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட பொருட்களை பேக்கிங் செய்து விற்றால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றுள்ளார்.


Tags :
|
|
|