Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து டில்லி முதல்வருடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து டில்லி முதல்வருடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை

By: Nagaraj Sun, 14 June 2020 10:30:54 AM

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து டில்லி முதல்வருடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை

இன்று ஆலோசனை.. டில்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, அதை கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய அமைச்சர் அமித் ஷா, இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

டில்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1,200க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

key decision,consultation,tilley,corona,increase ,முக்கிய முடிவு, ஆலோசனை, டில்லி, கொரோனா, அதிகரிப்பு

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும் இந்த ஆலோசனையில் பங்கேற்கவுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டிலேயே, மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக டில்லியில் தான் அதிக பாதிப்பு உள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை என்றும் பலரும் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றமும் தெரிவித்து உள்ளது. இதையடுத்து, உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, டில்லி முதல்வர், கவர்னருடன், மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்ததவுள்ளார்.

இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags :
|
|