Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 8ம் தேதி முதல் வியட்நாமுக்கு பயணமாகும் மத்திய அமைச்சர்

வரும் 8ம் தேதி முதல் வியட்நாமுக்கு பயணமாகும் மத்திய அமைச்சர்

By: Nagaraj Sun, 05 June 2022 10:02:20 PM

வரும் 8ம் தேதி முதல் வியட்நாமுக்கு பயணமாகும் மத்திய அமைச்சர்

புதுடில்லி: வியட்நாமுக்கு பயணம்... பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 8 முதல் வியட்நாமுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங்கின் அழைப்பின் பேரில், ஜூன் 8 முதல் 10 வரை வியட் நாமுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். ஹனோயில் உள்ள மறைந்த அதிபர் ஹோ சி மின்னின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் தமது பயணத்தைத் தொடங்குவார்.

ராஜ்நாத் சிங், வியட்நாம் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அப்போது ஆய்வு செய்வார்கள். பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை அவர்கள் ஆராய்வார்கள்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் ஃபூக் மற்றும் பிரதமர் திரு பாம் மின் சின் ஆகியோரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளார்.

travel,security relations,explore,new venture,collaboration ,
பயணம், பாதுகாப்பு உறவுகள், ஆராய்வார்கள், புதிய முயற்சி, ஒத்துழைப்பு

Tags :
|