Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் .. மத்திய அமைச்சர்

தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் .. மத்திய அமைச்சர்

By: vaithegi Sun, 25 Dec 2022 08:18:58 AM

தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும்   ..  மத்திய அமைச்சர்

சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்வில், 29,620 பேருக்கு பட்டங்களும் 41 பேருக்கு முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டன.

இதனை அடுத்து இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ துறையினரின் பணி, மிகச்சிறப்பானது. பிரதமரின் முயற்சியால் மக்களுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. சித்த மருத்துவம் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது.

union minister,medical ,மத்திய அமைச்சர்,மருத்துவம்

இதையடுத்து கோவிட் காலத்தில் உயிரைக் காத்துக் கொள் சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளிடம், சில தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலுத்தும்படி நிர்பந்திக்கப்பட்டது மிகவும் வேதனையளித்தது. ஆராய்ச்சிக்கும் உயர்கல்விக்கும் தாய் மொழியில் கல்வி கற்பதுதான் சிறந்த வழி.

தமிழை நேசிக்கும் தமிழ்நாட்டில் மருத்துவத்துறை கல்வி அனைத்தும் தமிழில் நடத்தினால் மாணவர்கள் உயர் ஆய்வுகள் வரை எளிதாக மேற்கொள்ள முடியும்.மேலும் மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும், தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும்” என அவர் கூறினார்.

Tags :