Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொழும்பு மேயரை பதவியிலிருந்து நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

கொழும்பு மேயரை பதவியிலிருந்து நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

By: Nagaraj Tue, 02 June 2020 6:23:07 PM

கொழும்பு மேயரை பதவியிலிருந்து நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

மேயரை நீக்க முடிவு... கொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரங்களில் அவர் பங்கேற்காமல் இருக்கின்றமையே இதற்கு காரணமென கூறப்படுகின்றது.

mayor,colombo,united national party,resolution,office ,மேயர், கொழும்பு, ஐக்கிய தேசிய கட்சி, தீர்மானம், பதவி

கொழும்பு நகராட்சி மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் சிறிகொத்தாவில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கொழும்பு துணை மேயர், முகமது இக்பால் அடுத்த கொழும்பு மேயராக முன்மொழியப்பட்டதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
|