Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் ஐ.நா. தீர்மானத்தை மதித்து நடக்க வலியுறுத்தல்

பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் ஐ.நா. தீர்மானத்தை மதித்து நடக்க வலியுறுத்தல்

By: Nagaraj Fri, 26 June 2020 1:42:55 PM

பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் ஐ.நா. தீர்மானத்தை மதித்து நடக்க வலியுறுத்தல்

ஐ.நா., எச்சரிக்கை... 'பாகிஸ்தான், இன்னும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாகவே திகழ்கிறது' என, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து, 'பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் அனைத்து நாடுகளும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும்' என, ஐ.நா., எச்சரித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஐ.நா.,வில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2019 பிப்ரவரியில், காஷ்மீரில் புல்வாமாவில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், லஷ்கர் -இ - தொய்பா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலுக்குப் பின், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்தது.

un warning,security council,warning,terrorism ,ஐ.நா. எச்சரிக்கை, பாதுகாப்பு கவுன்சில், எச்சரிக்கை, பயங்கரவாதம்

சில பழமைவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்கு எதிராகவும் கடுமை காட்டப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான், இன்னும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் எல்லா நாடுகளும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும். பயங்கரவாதம், உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல். அதை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :