Advertisement

உ.பி.மாநில பாஜ தலைவர் கூறிய கருத்தால் கடும் சர்ச்சை

By: Nagaraj Sun, 25 Oct 2020 8:45:26 PM

உ.பி.மாநில பாஜ தலைவர் கூறிய கருத்தால் கடும் சர்ச்சை

சர்ச்சையான கருத்து... பாகிஸ்தான், சீனாவுடன் போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சர்ச்சைப் பேச்சால் இந்தோ-சீன எல்லையில் ராணுவப் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நாடு எப்போது போரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கியது ஆகியவற்றைப் போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எப்போது போர் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

controversy,opinion,defense,rajnath singh,determination ,சர்ச்சை, கருத்து, பாதுகாப்புத்துறை, ராஜ்நாத் சிங், மன உறுதி

மேலும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசினார். இந்த கருத்துக்கள் குறித்து உள்ளூர் எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா கேட்டபோது, ​​உத்தரப்பிரதேச பாஜக தலைவர் கட்சி ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தோ - சீனா எல்லையில் பதற்றம் நீங்கவே இந்தியா விரும்புவதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :