Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் விடுமுறை .. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% வரை அதிகரிப்பு

தொடர் விடுமுறை .. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% வரை அதிகரிப்பு

By: vaithegi Sat, 12 Aug 2023 2:53:56 PM

தொடர் விடுமுறை ..  ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30% வரை அதிகரிப்பு

சென்னை: இன்றும் , நாளையும் வார விடுமுறை என்பதாலும், செவ்வாய் கிழமை ( ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழாவை ஓட்டி அரசு விடுமுறை என்பதாலும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.

இதையடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் வேலை நாளான திங்கள் கிழமைவிடுப்பு எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையில் ஊர்களுக்குச் செல்கின்றனர். எனவே இதனையொட்டி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி கொண்டு வழிகிறது. சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் முன்பதிவு இருக்கைகள் நிரம்பிவிட்டன.

omni bus,serial holiday ,ஆம்னி பேருந்து,தொடர் விடுமுறை

மேலும் அத்துடன் ஆம்னி பேருந்துகளிலும் 90% இருக்கைகள் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டணத்தை 30% உயர்த்தியுள்ளன.

அதைதொர்ந்து குளிர்சாதன வசதிகொண்ட அமர்ந்து செல்லும் பேருந்துகளில் ரூ. 2000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மதுரை, நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags :