Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை .. கேரளா அரசு அறிவுப்பு

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை .. கேரளா அரசு அறிவுப்பு

By: vaithegi Thu, 18 May 2023 10:46:48 AM

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை ..  கேரளா அரசு அறிவுப்பு

கேரளா: 7 ஆண்டுகள் சிறை – கேரளா அரசு அதிரடி ... கேரளாவில் மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதைப்பொருளுக்கு அடிமையானவருக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

kerala government,jail,doctors , கேரளா அரசு,சிறை ,மருத்துவர்கள்

இந்த நிலையில், கேரள அரசு, கேரளாவில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும், மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அரசாணை வழிவகை செய்கிறது.





Tags :
|