Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த எம்.பி., உதய கம்மன்பில வலியுறுத்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த எம்.பி., உதய கம்மன்பில வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:55:14 PM

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த எம்.பி., உதய கம்மன்பில வலியுறுத்தல்

கொழும்பு: எம்.பி., வலியுறுத்தல்... அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேர்தல் தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் ஆணைக்குழு தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை விடுத்ததால் நிதி விடுவிப்பை நிதியமைச்சு முடக்கியது.

தேர்தல் ஆணைக்குழு வாக்கெடுப்புக்கு திகதி அறிவிப்பதும் பின்னர் நிதி நெருக்கடியால் தேர்தல் வாக்கெடுப்பு ஒத்திவைப்பதும் வழமையாகிவிட்டது. தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு ஆகிய தரப்பினரது முரண்பாடான செயற்பாடுகளினால் வேட்பு மனுத் தாக்கல் செய்து விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

needs,cost of living,basic,salary,economy,vulnerability ,தேவைகள், வாழ்க்கைச் செலவு, அடிப்படை, சம்பளம், பொருளாதாரம், பாதிப்பு

தேர்தல் சட்டத்தின் 102ஆவது உறுப்புரையில், ‘தேர்தல் ஒன்றுக்கு போட்டியிட தீர்மானிக்கும் அரச சேவையாளர் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பணிகள் நிறைவு பெறும் வரை சேவையில் ஈடுபடக்கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை கொண்டு எவ்வாறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|