Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தல்

வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 20 July 2023 8:34:41 PM

வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தல்

சென்னை: வன்முறையை கட்டுப்படுத்த முடியாத மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நடந்த வன்முறை வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இணையத்தில் வைரலான வீடியோ எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடி, மணிப்பூர் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் தரவேண்டும் என்று ஜோதிமணி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது.

Tags :