Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதானி குழுமத்திற்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வலியுறுத்தல்

அதானி குழுமத்திற்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வலியுறுத்தல்

By: Nagaraj Fri, 10 Feb 2023 04:38:01 AM

அதானி குழுமத்திற்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வலியுறுத்தல்

புது டெல்லி: உரிய விசாரணை நடத்த வேண்டும்... அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாளிலிருந்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாபெரும் ஊழலில் பொதுமக்களின் பணம் உள்ளது. எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்து கடன் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; பிரதமர் எதற்கும் அஞ்சவில்லை என்றால், அதானி குழுமத்தின் மீதான ஜேபிசி விசாரணை குறித்து எதுவும் கூறாமல் தவிர்ப்பது ஏன்? இரண்டரை ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு 13 மடங்கு அதிகரித்துள்ளது.

2014ல் 50,000 கோடி, சொத்து மதிப்பு 2019ல் 1 லட்சம் கோடியாக உயர்ந்தது. அப்போது அதானியின் சொத்து மதிப்பு 12 லட்சம் கோடியாக அதிகரிக்க என்ன மந்திரம் நடந்ததென்று தெரியவில்லை என கார்கே பேசினார்.

adani group,central government,mallikarjuna kharge,nirmala sitharaman, ,அதானி குழுமம், நிர்மலா சீதாராமன், மத்திய அரசு, மல்லிகார்ஜூன கார்கே

கார்கேவின் பேச்சுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; அவர்கள் வேண்டுமென்றே பிரதமர் மோடிக்கு எதிராக முற்றிலும் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இந்திய பிரதமரை வெளிப்படையாக அவமதிப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு கார்கே பதிலளிக்கையில், உண்மையைப் பேசினால் நான் தேசவிரோதியா? நான் மற்றவர்களை விட தேசப்பற்று கொண்டவன். நான் பூமியின் மகன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பியூஷ் கோயல் பேசுகையில்; கார்கே பங்குச் சந்தையின் நிலையைப் பற்றியும் முழுமையாகப் பேசுகிறார். இதில் அரசு தலையிட எந்த காரணமும் இல்லை. இதுபற்றி சரியான தகவல்களை முன்னாள் நிதியமைச்சரிடம் கார்கே கேட்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.

Tags :