Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவால்னி விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தல்

நவால்னி விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 07 Oct 2020 3:43:43 PM

நவால்னி விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தல்

விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்... அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜெர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ரஷ்ய மண்ணில் அந்நாட்டைச் சேர்ந்த குடிமகனுக்கு எவ்வாறு இது நடத்தப்பட்டது என்பதை ரஷ்யா விளக்க வேண்டும். இது தொடர்பாக முழு விசாரணையை ரஷ்யா நடத்த வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதியினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி.

germany,navalny,poison,trial,series of propaganda ,ஜெர்மனி, நவால்னி, விஷம், விசாரணை, தொடர் பிரசாரம்

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது. எனினும், ரஸ்ய அரசாங்கம் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்தும் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசாங்கம் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|