Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அல்கொய்தாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தல்

அல்கொய்தாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தல்

By: Nagaraj Thu, 09 June 2022 09:58:21 AM

அல்கொய்தாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தல்

மும்பை: அல்கொய்தா போன்ற இஸ்லாமிய குழுக்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி வலியுறுத்தினார்.

சர்ச்சை கருத்தை கூறியதற்காக பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் நுபுர் சர்மா. இவரது கருத்துக்கு, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், பக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லிம் நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

முகமது நபியை அவமதித்தற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்கொலை மனித வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தப்போவதாக அல்கொய்தா இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தது. இதையடுத்து அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

registration,action,13 countries,assertion,history ,பதிவு, நடவடிக்கை, 13 நாடுகள், வலியுறுத்தல், வரலாறு

இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில், அல்கொய்தா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்களை மத்திய கிழக்கு நாடுகள் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டனம் தெரிவிக்க வேண்டும். மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது வேறு, அதன் அடிப்படையில் மிரட்டல் விடுப்பது வேறு. இவ்வாறு அவர் பதிவு செய்து இருந்தார்.

நுபுர்சர்மா விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் பிரியங்கா சதுர்வேதி பா.ஜ.க.வை விமர்சனம் செய்து இருந்தார். பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில், இந்தியாவின் தூதரக வரலாற்றில் முதல் முறையாக 13 நாடுகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் மற்றும் அதன் பிறகு முகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்முறையாக ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தேசத்தின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது என பதிவு செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|