Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய-சீனா இடையே மோதல் நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்திய-சீனா இடையே மோதல் நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்கா அறிவிப்பு

By: Karunakaran Thu, 02 July 2020 10:46:00 AM

இந்திய-சீனா இடையே மோதல் நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்கா அறிவிப்பு

லடாக் எல்லையில் கடந்த 15-ஆம் தேதி இந்திய0சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் போர் தளவாடங்களை குவித்து வருகின்றன.

இருப்பினும் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ கமண்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய-சீன பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

indo-china conflict,america,attack,white house spokesman ,இந்தோ-சீனா மோதல், அமெரிக்கா, தாக்குதல், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஹெல்லி மெக்கிம்னி கூறுகையில், இந்திய-சீன பிரச்சனையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என இரு நாடுகளுமே விரும்புகின்றன. தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு அமைதியான முறையில் தீர்வுகான நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்று கூறினார்.

மேலும் அவர், இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீன மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் முழு உருவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை தன்மையை காட்டுவதாக அதிபர் டிரம்ப் கூறினார் என தெரிவித்துள்ளார்.

Tags :
|