Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த ஜி 7 கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமருக்கு அமெரிக்கா அழைப்பு

அடுத்த ஜி 7 கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமருக்கு அமெரிக்கா அழைப்பு

By: Nagaraj Wed, 22 July 2020 9:39:10 PM

அடுத்த ஜி 7 கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமருக்கு அமெரிக்கா அழைப்பு

இந்திய பிரதமருக்கு அழைப்பு... அடுத்த ஜி 7 கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா அழைத்துள்ளது என்று இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

ப்ளூ டாட் நெட்வொர்க்கை மேம்படுத்த அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், வர்த்தகத்திற்கு இந்தியா எப்போதும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

threat,modi,g7 meeting,call,mike pompeo ,அச்சுறுத்தல், மோடி, ஜி 7 கூட்டம், அழைப்பு, மைக் பாம்பியோ

இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவின் புதிய யுகம் என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவை வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

“இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவின் புதிய யுகம் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் அச்சுறுத்தல்களுக்கு இடையே இரு நாடுகளும் வலுவான உறவுகளை வளர்ப்பது முக்கியம்” என்றும் அவர் கூறினார்.

Tags :
|
|
|