Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க - சீன வர்த்தக பேச்சுவார்த்தை

முதலாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க - சீன வர்த்தக பேச்சுவார்த்தை

By: Karunakaran Tue, 25 Aug 2020 3:36:52 PM

முதலாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க - சீன வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. பல விவகாரங்களில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. சீனா பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தது மோதலை பெரிதாக்கியுள்ளது.

சீனா பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய அதிக வரி விதிக்கப்படும் என்றால் நாங்களும் அதிக வரி விதிப்போம் என்று சீனா பதிலுக்கு கூறி வந்தது. இரு நாட்டிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

us,china,trade,phase i agreement ,அமெரிக்கா, சீனா, வர்த்தகம், முதலாம் கட்ட ஒப்பந்தம்


இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவியது என டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இது சீனாவை மேலும் கோபமடைய செய்துள்ளது. இதனால் இரு நாட்டிற்கும் இடையில் கடும்மோதல் உருவாகியது. வர்த்தகப்போர், கொரோனா விவகாரம், தென் சீனக்கடல் விவகாரம் என இருநாடுகள் இடையே பெரும் மோதல் போக்கு உள்ளது.

இந்நிலையில், வர்த்தகம் தொடர்பாக முதலாம் கட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க - சீனா தலைவர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை.

Tags :
|
|
|