Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எச்-1 பி விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல் நடத்த அமெரிக்கா முடிவு

எச்-1 பி விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல் நடத்த அமெரிக்கா முடிவு

By: Nagaraj Sat, 29 July 2023 8:21:35 PM

எச்-1 பி விசாக்களுக்கு 2-வது முறையாக குலுக்கல் நடத்த அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: குலுக்கல் நடத்த முடிவு... நிரந்தர குடியுரிமை பெறாமல் அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு அந்நாடு ‘எச்-1பி’ விசா வழங்கி வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும் சுமார் 85,000 H-1B விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர்.

எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் நிதி ஆண்டுக்கான ‘எச்-1 பி’ விசா குலுக்கல் கடந்த மார்ச் மாதம் நடந்தது.

2nd-round,decision,h-1b,shakedown,usa,visas ,அமெரிக்கா, எச்-1 பி, 2-வது முறை, குலுக்கல், முடிவு, விசாக்கள்

இந்த நிலையில் நடந்து முடிந்த ‘எச்-1 பி’ விசா குலுக்கல் 2024-ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யவில்லை என்பதால் 2-வது முறையாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த குலுக்கல் நடத்தப்படும் எனவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகமை தெரிவித்துள்ளது.

முதல் குலுக்கலில் தேர்வு ஆகாத பல விண்ணப்பதாரர்களுக்கு இந்த 2-வது குலுக்கல் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இவர்களில் நூற்றுக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் அடங்குவர். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|