Advertisement

உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு

By: Nagaraj Sun, 09 July 2023 11:14:24 PM

உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு

அமெரிக்கா: ரஷியாவுடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு கொத்துகுண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 500-வது நாளை தொட்டது. ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது.

ukraine,cluster bombs,usa,offers,decision ,உக்ரைன், கொத்து குண்டுகள், அமெரிக்கா, வழங்குகிறது, முடிவு

இருந்த போதிலும் உக்ரைனின் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஏவுகணைகளை அழிக்கும் அமைப்பு ராக்கெட் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கிடையே கிளஸ்டர் எனப்படும் கொத்துகுண்டுகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

இந்த நிலையில் மிக ஆபத்தான கிளஸ்டர் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும் போது, 'கொத்து குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை அளிப்பது தாமதப்படுத்தப்பட்டது.

ஆனால் உக்ரைனில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள், ரஷியாவால் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைவிட மிகவும் பாதுகாப்பானவை' என்றார்.

Tags :
|
|