Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம்

சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம்

By: Karunakaran Thu, 02 July 2020 1:07:45 PM

சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வர சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என்று பல்வேறு நாடுகள் சீனாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவின் இந்த புதிய தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சீனா எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

national security law,hong kong,america,china ,தேசிய பாதுகாப்பு சட்டம், ஹாங் காங், அமெரிக்கா, சீனா

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ஹாங்காங்குக்கு இது ஒரு துக்கமான நாள். சீனாவின் இந்த நடவடிக்கை ஹாங்காங்கின் ஜனநாயகத்தை அழிக்கிறது. சீனாவின் சர்வாதிகார நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு அமெரிக்கா சும்மா நிற்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின்படி சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதேவேளை சுதந்திரத்தை விரும்பும் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் எனவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Tags :