Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை - ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை - ஜனாதிபதி டிரம்ப்

By: Karunakaran Sat, 01 Aug 2020 1:26:28 PM

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை - ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு மத்தியில் அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறங்கவுள்ளார்.

கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருப்பினும் ஜனாதிபதி டிரம்பும், ஜோ பிடனும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசை கையாண்ட விதம், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

trump,presidential election,america,postponed ,டிரம்ப், ஜனாதிபதித் தேர்தல், அமெரிக்கா, ஒத்திவைப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப் தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார். அமெரிக்க சட்டத்தின்படி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்றாலும், அவரின் திடீர் நிலைப்பாடு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது.

தற்போது வெள்ளை மாளிகையில் நேற்று டிரம்ப் பேட்டி அளித்தபோது, நான் தாமதிக்க விரும்பவில்லை தேர்தலை நடத்த விரும்புகிறேன். அதேசமயம் தேர்தல் முடிவுகளுக்காக 3 மாதங்கள் வரை காத்திருக்க விரும்பவில்லை. ஜனாதிபதி தேர்தல் தேதியில் மாற்றத்தை நான் காண விரும்புகிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. அதே சமயம் நான் ஒரு வக்கிரமான தேர்தலை காண விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

Tags :
|