Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குவைத் நாட்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்

குவைத் நாட்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்

By: Karunakaran Thu, 31 Dec 2020 11:05:54 AM

குவைத் நாட்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்

குவைத் நாட்டுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்பட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் அரசு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகாப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

us government,4 billion worth,sales,kuwait ,அமெரிக்க அரசு, 4 பில்லியன் மதிப்பு, விற்பனை, குவைத்

மேலும் அதில், இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி அரேபியாவுக்கு 290 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,123 கோடி) மதிப்பிலான 3,000 வெடிகுண்டுகளை விற்கவும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்மொழியப்பட்ட இந்த விற்பனை மத்திய கிழக்கில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சக்தியாக தொடரும் நட்பு நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை கூறப்பட்டுள்ளது.

Tags :
|