Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மீது அமெரிக்க சுகாதார மந்திரி சந்தேகம்

ரஷியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மீது அமெரிக்க சுகாதார மந்திரி சந்தேகம்

By: Karunakaran Thu, 13 Aug 2020 11:38:25 AM

ரஷியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மீது அமெரிக்க சுகாதார மந்திரி சந்தேகம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா கொண்டு வந்துவிட்டதாக நேற்று முன்தினம் ரஷ்யா அறிவித்தது உலகையே அதிர்ச்சியடைய செய்தது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் பற்றிய தரவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார், இதுகுறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

us health secretary,suspicion,corona vaccine,russia ,அமெரிக்க சுகாதார செயலாளர், சந்தேகம், கொரோனா தடுப்பூசி, ரஷ்யா

அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார் தைபேயில் பேட்டி அளித்தபோது, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, முதலில் யார் உருவாக்குகிறார்கள் என்பதற்கான போட்டி அல்ல. அமெரிக்காவில் 2 மருந்து நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மூன்றாவது கட்ட சோதனையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ரஷிய தடுப்பூசி எந்த தகவலையும் வெளியிடாமல் அந்த நிலைக்குள் நுழைகிறது. அமெரிக்க தடுப்பூசி செயல்முறைகள், தங்கம் போன்ற தரமான, பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை கோடிக்கணக்கான டோஸ்கள் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags :