Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

By: Nagaraj Wed, 22 July 2020 2:16:18 PM

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அதிரடித்துள்ளது.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது போன்ற அடக்குமுறைகளை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

united states,action,sanctions,11 chinese companies ,அமெரிக்கா, அதிரடி, பொருளாதார தடை, 11 சீன நிறுவனங்கள்

உய்குர் மக்களை சீனா நடத்தும் விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு உய்குர் இன பெண்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்யப்படுகிறது. அவர்களின் தலைமுடியை கத்தரித்து அழகு சாதனப்பொருட்கள் செய்ய பயன்படுத்துகிறது சீனா என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் அமெரிக்கா இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|