Advertisement

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை

By: vaithegi Wed, 18 Oct 2023 10:23:15 AM

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை


இஸ்ரேல் : இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 11-வது நாளாக நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தீவிர தாக்குதல்நடத்தின. இஸ்ரேலிலிருந்து ஏராளமானஏவுகணை குண்டுகளும் வீசப்பட்டன.

இதையடுத்து இதில் 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர். 1,200-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரின் கூக்குரல் கேட்கிறது. ஆனால் மீட்க முடியவில்லை என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

advice,us president joe biden,war ,ஆலோசனை ,அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர்

இஸ்ரேல் ராணுவ மூத்த தளபதி மைக்கேல் தற்போது இஸ்ரேலில் முகாமிட்டு உள்ளார். அமெரிக்காவின் முப்படைகளை சேர்ந்த 2,000 வீரர்கள் விரைவில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.இதையடுத்து இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் இஸ்ரேல் ராணுவத்துக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்குவார்கள்’’ என்று தெரிவித்தன.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, போர் நிலவரம் பற்றி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இஸ்ரேலில் 5 மணி நேரம் தங்கியிருக்கும் அதிபர் பைடன் அங்கிருந்து ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு செல்கிறார். அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ்ஆகியோருடன் பைடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.


Tags :
|