Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீண் பழிகளை சுமத்துகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்; சீனா குற்றச்சாட்டு

வீண் பழிகளை சுமத்துகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்; சீனா குற்றச்சாட்டு

By: Nagaraj Tue, 19 May 2020 11:41:08 PM

வீண் பழிகளை சுமத்துகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்; சீனா குற்றச்சாட்டு

சா்வதேச சுகாதாரத்தில் தனது பொறுப்புகளை அமெரிக்கா தட்டிக் கழிக்கிறது. மேலும், தங்களது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வீண் பழிகளை சுமத்தி வருகிறார் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று மற்றும் உலக சுகாதார அமைப்பு விவகாரத்தில் சீனா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வீண் பழிகளை சுமத்தி வருகிறாா். சீனாவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவா் இவ்வாறு பேசி வருகிறாா்.

china,indictment,america,health system,president trump ,சீனா, குற்றச்சாட்டு, அமெரிக்கா, சுகாதார அமைப்பு, அதிபர் டிரம்ப்

பொதுமக்களை தவறாக திசைத்திருப்பவும், கொரோனாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளைகக் கொச்சைப்படுத்தவும் இதுபோன்று யூகமான தகவல்களை டிரம்ப் பயன்படுத்தியுள்ளாா். இதன் மூலம், சா்வேச சுகாதார நலனை மேம்படுத்துவதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவா் முயல்கிறாா். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தாா். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இவ்வாறு தெரிவித்தாா்.

முன்னதாக கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பல உண்மைகளைத் தங்களிடமிருந்து மறைத்ததாகவும் குற்றம் சாட்டிய அதிபா் டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|