Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் காரில் உலா வந்து தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் காரில் உலா வந்து தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்

By: Karunakaran Tue, 06 Oct 2020 08:05:32 AM

அமெரிக்க அதிபர் டிரம்ப் காரில் உலா வந்து தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டிரம்ப் நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை வால்டர் ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

us,trump,car,supporters ,அமெரிக்கா, டிரம்ப், கார், ஆதரவாளர்கள்

வால்டர் ரீட் தேசிய ராணுவ ஆஸ்பத்திரியில் டிரம்ப் சிகிச்சை பெற்றுக்கொண்டே அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் ராணுவ ஆஸ்பத்திரிக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை டிரம்ப் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து, காரில் வலம் வந்தார். காருக்குள் முக கவசம் அணிந்து அமர்ந்திருந்த டிரம்ப் ஆஸ்பத்திரியின் வெளியே நின்றிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார்.

டிரம்பின் திடீர் வருகையால் அவரது ஆதரவாளர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கரவொலி எழுப்பி டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வீதி உலாவை முடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு திரும்பிய பின்னர் டிரம்ப் மற்றொரு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார். அதில், எனக்கு இது வித்தியாசமான பயணமாக அமைந்திருந்தது. ஆஸ்பத்திரி எனும் உண்மையான பள்ளிக்கூடத்துக்கு வந்து கொரோனா வைரஸ் பற்றி அதிகமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன், புரிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|